தர்பார் படம் தோல்வி - தலைவர் 168 சூட்டிங்கில் பிரச்சனை - ரஜினியை சுற்றிய அரசியல் கழுகுகள் - ஒரு அலசல்


ஏம்பா.. தர்பார் படம் ப்ளாப்-ஆகிடுச்சாமே..டிஸ்ட்ரிப்யூடர் எல்லாம் ரஜினிகாந்த் வீட்டு வாசலில் நிக்குறாங்களாமே.. ப்ரொட்யூசர் தலையில துண்ட போட்டுட்டாங்களாமே.. இப்படிதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த எதிர்மறையான கருத்துக்கள் உலா வந்துகொண்டிருகின்றன. இன்னும் வரும்.

ரசிகர்களிடம் வரவேற்பை பெறாத கபாலி படத்தை ஆஹா.. ஓஹோ.. பிரமாதம்.. 700 கோடி என்ற அண்டப்புழுகு புழுகிய அதே ஊடகங்கள் தான் இப்போது தர்பார் படத்தை பிளாப், ரஜினி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் கோரிக்கை என கூறிக்கொண்டிருகின்றன.

தர்பார் படம் வெளியான நாள் முதல் இடையில் ஒரே ஒரு நாள் தவிர தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை. படம் வெளியான முதல் மூன்று நாட்களும் 80% அரங்கம் நிறைந்த காட்சிகள். அடுத்தடுத்த நாட்களில் 60%க்கும் குறையாமல் அரங்குநிறைந்த காட்சிகள். போட்டிக்கு எந்த படமும் இல்லை. தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படமும் ஐந்து நாட்கள் கழித்து தான் ரிலீஸ் ஆனது. இதில், எங்கே இருந்து வந்தது வியாபார நட்டம் என தியேட்டருக்கு வெளியே டீக்கடை வைதிருப்பவர் கூட கூறுவார்.

எங்கயோ.. இடிக்குதே என உங்களுக்கு பொறி தட்டினால் நீங்கள் சாமனியர். இவங்க தான் இதுக்கெல்லாம் காரணம் என உங்களுக்கு தோன்றினால் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை நீங்கள் கவனித்து கொண்டிருகிறீர்கள் என்று அர்த்தம்.

ஆம், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகி விட்டது. ரஜினியை தங்களுக்கு எதிரான ஒரு ஆளுமையாக வளர விட்டுவிட கூடாது என ஒரு குழுமம் 24X7 வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றது.

இதனால, தான் ரஜினி சார்ந்த சிறு சிறு பிரச்சனைகள் முதல் எப்போதே நடந்த விமான நிலைய தகராறு வரை தோண்டி எடுத்து ரஜினியின் புகழுக்கு களங்கம் கற்பித்து கொண்டிருகின்றது ஒரு குழு.

யெஸ்.. ரஜினிகாந்த்-தை சுற்றி அரசியல் கழுகுகள் வட்டமடிக்க ஆரம்பித்து விட்டன என்பது ஆணித்தரமான உண்மை. ரஜினி பாம்பு போல மாறி சீறுவாரா..? அல்லது ஒன்றும் அறியா எலி போல கழுகளிடம் சிக்கிக்கொள்வாரா..? இப்போதைக்கு, இதனை ரஜினி மட்டுமே முடிவு செய்ய முடியும்.

2021 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் ஒரு கண்ணில் பக்கம் வேலை பார்த்துக்கொண்டிருக்க மறு கண்ணில்ரஜினியின் அரசியல் பிரவேசம் எப்போது என நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கின்றன. அதே நேரம், ரஜினியை சுற்றி என்னென்னன சர்ச்சை வளையங்களை உருவாக்க முடியும் என்று 24 மணி நேரமும் யோசித்துக்கொண்டிருகின்றன.
Blogger இயக்குவது.