பொன்னியின் செல்வன் - வைரமுத்து நீக்கபட்டது ஏன்..? - ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பதிலை பாருங்க..!


இயக்குனர் மணிரத்னம் மிக பிரம்மாண்டமாக சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கிவரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். 

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. சமீபத்தில், பொன்னியின் செல்வன் போஸ்டர் மற்றும் படக்குழு பற்றிய விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. 

தமிழ் நாவலின் அடிப்படையில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தமிழில் இல்லை என ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

மேலும், அதில் பாடலாசிரியர் என கூறப்பட்ட வைரமுத்து பெயரும் இல்லை. அவர், ஏன் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து நீக்கப்பட்டார் என இசுயமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் கேட்டதற்கு, "அது பற்றி மணிரத்னம் தான் கூற வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது" என பதில் அளித்துள்ளார்.
Blogger இயக்குவது.