"தர்பார்" - ஐந்து நாள் வசூல் இவ்வளவு தான் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்...!
பொங்கல் விடுமுறையை குறிவைத்து வெளியாகியுள்ளது ரஜினியின் தர்பார் படம். சென்ற வியாழக்கிழமை ரிலீஸ் ஆன இந்த படம் வசூல் குவித்து வருகிறது.
ஆனால், ரசிகர்கள் சிலர் இந்த படம் முதல் நாளிலேயே 100 கோடியை கடந்து விட்டது என போலியான தகவல் ஒன்றை பரப்பி வந்தனர். ஆனால், நம்முடைய தளத்தில் உண்மையான வசூல் என்ன என்பதை பதிவு செய்திருந்தோம்.
Check This : தர்பார் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்
இந்நிலையில், படத்தை தயாரித்த லைகா நிறுவனமே முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 150 கோடி ருபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது ஐந்தாம் நாளான நேற்று திங்கட்கிழமை பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது. திங்கட்கிழமை சென்னை பகுதியில் 86 லட்சம் வசூலித்துள்ளது தர்பார்.
இதன் மூலம் ஐந்து நாட்களில் சென்னையில் மட்டும் வசூல் 8 கோடி என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது. உலகம் முழுதும் 173 கோடி ரூபாயை ஐந்து நாளில் வசூல் செய்துள்ளது தர்பார்.
மேலும், இன்று முதல் ஒரு வாரத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் தமிழ்நாடு முழுவதும் "தர்பார்" வசூல் மழையில் நனையும் படத்தின் வசூல் இன்னுமே அதிகமாகும் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.