தர்பார் - உலகம் முழுதும் முதல் நாள் வசூல் விபரம் - அதிர்ந்து கிடக்கும் கோலிவுட்.!


இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் ரஜினி ஆகியோர் முதன் முறையாக இணைந்த படம் "தர்பார்". இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து கலக்கியுள்ளார். 

நிஜமாகவே இவருக்கு 70 வயசா என கேட்க தோனுகிறது இவரது நடிப்பும் ஸ்டைலும். விமர்சனங்கள் கலவையாக வந்தாலும் படத்தின் வசூலும் எந்த ஒரு குறையும் இல்லாமல் அதிகம் வசூலிக்கும் என்கின்றனர். 

வரும் நாட்களின் பொங்கல் விடுமுறை வேறு வருகிறது, பலருக்கும் படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ் அரிய அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது விவரங்கள் இதோ,
  • சென்னை- ரூ. 2.27 கோடி 
  • USA- $615K 
  • நியூசிலாந்து- $16,500 
  • ஆஸ்திரேலியா- $160,000 
  • ஹைதராபாத்- ரூ. 12.05 லட்சம்
இப்படி சில இடங்களின் விவரங்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் சினிமா டிராக்கர்கள் மத்தியில் படம் ரூ. 55 கோடிக்கு மேல் முதல் நாளில் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறுகிறார்கள்.
Blogger இயக்குவது.