சும்மா கிழி..! - தர்பார் - இரண்டு நாள் மாஸ் வசூல் சாதனை - அதிர்ந்து கிடக்கும் கோலிவுட் வட்டாரங்கள்..!
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நேற்று (ஜனவரி 9) வெளியான இந்தப் படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
வசூல் ரீதியாக இந்தப் படம் தமிழகத்தில் எப்படி என்ற முழுமையான விவரம் நேற்று மாலை (ஜனவரி 10) வெளியானது. முன்னதாக, முதல் நாளில் சென்னையில் மட்டும் இந்தப் படம் 2.27 கோடி வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் முதல் நாள் அதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் ரஜினி நடித்த '2.0' முதல் இடத்தில் இருக்கிறது. முதல் நாளில் 2.64 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த 'சர்கார்' படம் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்து 2-ம் இடத்தில் இருக்கிறது.
சர்கார் படத்தை விட 10 லட்சம் ரூபாய் குறைவாக வசூல் செய்து மூன்றாவது இடத்தை தர்பார் பிடித்துள்ளது. சற்று முன்பு வெளியான தகவலின் படி இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 53 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது தர்பார்.
தமிழகம் நீங்கலாக கேரளா, ஆந்திரா, தெலங்கனா மற்றும் வட இந்திய மாநிலங்களில் இரண்டு நாட்கள் முடிவில் 38 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. இந்தியா நீங்கலாக உலகம் முழுதும் 69 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக உலகம் முழுதும் 160+ கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இன்று சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதாலும், அடுத்தடுத்து பொங்கல் விருமுறை என்பதால் நிச்சயம் 400+ கோடி ரூபாய்களை தர்பார்
வசூலிக்கும் என்று கணித்துள்ளார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஜோதிடர்கள்.