படையப்பா படத்தில் முதலில் நீலாம்பரியாக நடிக்கவிருந்த நடிகை யார் தெரியுமா.? - ஷாக் ஆகிடுவீங்க..!!
கடந்த 1999-ம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம் செம்ம ஹிட் அடித்தது. வெறும் ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கபட்ட இந்த படம் வெளியாகி உலகம் முழுதும் 38 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இந்த படத்தில் ரஜினியை ஓவர்டேக் செய்து பெயர் எடுத்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் தமிழ் சினிமாவிற்கு புதிது. ஒரு பெண் இப்படியுமா மோசமாக நடந்து கொள்வாள் என்று கூறும் அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் அமைத்திருந்தது.
நீலாம்பரியாக நடித்தார் என்பதை விட நீலம்பரியாகவே வாழ்ந்தார் என்று சொன்னால் சரியாக இருக்கும். இந்த படம் வெற்றி பெற்றதற்கு காரணமே அவர் தான் என்று கூறலாம். படம் முழுக்க தோன்றும் கதாபாத்திரம் என்பதால் செம்ம ரீச். இது ரம்யாகிருஷ்ணன் தமிழ் சினிமாவில் அடுத்த ரவுன்ட் வருவதற்கு உதவியாக இருந்தது.
ஆனால், இந்த படத்தில் முதலில் நீலாம்பரியாக நடிக்க நடிகை நக்மா-வை டிக் செய்து இறுதியாக நடிகை மீனாவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர்.
மீனாவின் முக பாவனை அப்பாவியாகவே இருப்பதால் வில்லத்தனமான இந்த கதாபாத்திரத்திற்கு செட் ஆக மாட்டார் என ரம்யா கிருஷ்ணனுக்கு அந்த வாய்பை வழங்கியுள்ளனர்.