கணவருடன் கவர்ச்சி உடையில் விருது விழாவிற்கு விஜயம் செய்த பிரியங்கா சோப்ரா - வைரலாகும் புகைப்படங்கள்..!


இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. விஜய்யுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்த இவர் அதன்பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். 

இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் அளவிற்கு சென்ற இவர் அங்கும் பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் பிரபல அமெரிக்க நடிகரும், பாப் பாடகருமான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா. 

நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட 11 வயது குறைந்தவர். பிரியங்கா சோப்ராவை திருமணம் செய்யும் போது அவருக்கு 25  வயது தான் என்பதால் திருமணத்திற்கு முன்பு பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. ஒருவழியாக இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. 


திருமணம் ஆன நாள் முதல் சினிமா நிகழ்சிகளில் பங்கேற்ற செல்லும் போது கணவருடன் சேர்ந்தே விஜயம் செய்கிறார் அம்மணி. 


அந்த வகையில், தற்போது கோல்டன் க்ளோப் விருது விழாவில் கலந்து கொள்ள கணவருடன் கவர்ச்சி உடையில் வந்திருந்த அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Powered by Blogger.