விக்னேஷ் சிவன் இயக்கம் புதிய படத்தில் ஹீரோயின் நயன்தாரா..! - ஹீரோ யாருன்னு தெரியுமா..? - மறுபடியும் முதல்ல இருந்தா..?


நடிகை நயன்தாராவும், இயக்குனர்விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது உலகறிந்த விஷயம். நடிகை நயன்தாரா இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு மூன்றவதாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

இந்த காதல் திருமணத்தில்இணைய வேண்டும் என்பதே பல ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.இந்நிலையில்,விக்னேஷ் சிவன் இயக்கம் புதிய படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே, நானும் ரவுடி தான் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து இயக்கியிருந்தார் விக்னேஷ் சிவன்.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் காதல் பற்றிக்கொண்டது. இந்நிலையில், மீண்டும் விஜய் சேதுபதி-நயன்தாரவை வைத்து படம் எடுக்கவுள்ளார் விக்னேஷ் சிவன். இதனை அறிந்த ரசிகர்கள் "மறுபடியும் மொதல்ல இருந்தா..?" என கலாய்த்து வருகிறார்கள்.
Powered by Blogger.