அஜித், சூர்யா நடிக்க மறுத்து பிறகு வேறு நடிகர் நடித்து சூப்பர் ஹிட் அடித்த படம்..!
தமிழ் சினிமாவின் உச்சத்தில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கும் நடிகர் அஜித். மற்றும் பெரிய மார்க்கெட் கொண்ட நடிகர் சூர்யா. இவர்கள் இருவரும் 2000-ம் வருடம் வரை காதல் நாயகர்களாக, சாக்லேட் பாய்களாகவே தான் வலம் வந்தனர்.
நடிகர் அஜித் தீனா படத்திற்கு பிறகே தன்னை ஒரு முழு நேர ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிக்கொண்டார். அந்த வகையில் லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் என்ற படத்தில் அப்பாஸ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க, அஜித், சூர்யாவிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாம்.
ஆனால், அவர்கள் தவிர்த்து விட்டவே கடைசியாக அந்த கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடித்துள்ளார். இப்படம், பட்டி தொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனது. குடும்பங்கள் கொண்டாடின என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நடிகை சினேகா நடிப்பில் வெள்ளித்திரையில் முதலில் ரிலிஸான படமும் இது தான் என்பது உபரி தகவல்.