சண்டை போட்ட இயக்குனருடன் மீண்டும் கூட்டணி - நடிகர் சூர்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..! - ரசிகர்கள் குஷி.!
நடிகர் சூர்யா - இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்.
அதிலும், வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடத்தில்கலக்கியிருப்பார் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யா நடிப்பில் வருடம் தவறாமல் ஒன்று அல்லது இரண்டு படங்கள் வெளியாகி விடுகின்றன.
ஆனால், ப்ளாக் பஸ்டர் என்று சொல்லிக்கொள்ளும்படியான படம் "அயன்" படத்திற்கு பிறகு இன்னும் சூர்யாவிற்கு அமையவில்லை. பாத்து பாத்து படம் எடுத்தாலும் வெகுஜன ரசிகர்களிடம் சூர்யாவின் சமீப கால படங்கள் வரவேற்பை பெற தடுமாறுகின்றன என்பது தான் நிதர்சனம்.
துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் நடிகர் சூர்யா தான் நடிக்கவிருந்தார். ஆனால், சில பிரச்சனைகள் காரணமாக அந்த படத்திலிருந்து விலகி விட்டார் சூர்யா. இருந்தாலும், படத்தை கை விடாமல் அதே படத்தை நடிகர் சியான் விக்ரமை வைத்து இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சூர்யா கௌதம் மேனனுக்காக
பேசிய வீடியோ ஒன்று திரையிடப்பட்டுள்ளது. அதில் காக்க காக்க, வாரணம் ஆயிரம்
பற்றி சூர்யா உருக்கமாக பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய சூர்யா "உங்களுடன் மீண்டும் இணைந்து பணிபுரிய ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்கள் சொன்னால் நான் ரெடி" என கூறியுள்ளார்.
ஏற்கனவே, கடந்த டிசம்பர் மாதம் சூர்யாவுடன் பணி புரிய நான் காத்திருக்கிறேன் என்று கௌதம் மேனன் கூறியிருந்தார். சூர்யா - கௌதம்
மேனன் சண்டை போட்டு பிரிந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் சமரசமாகி
மீண்டும் கூட்டணி சேர விரும்புவது ரசிகர்களுக்கு குஷியான செய்தி தான்