தலைவன்.. வேற ரகம் - சற்று முன் வெளியான தர்பார் படத்தின் மாஸான ப்ரோமோ..!


ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படம் நாளை (ஜனவரி 9-ம் தேதி) ரிலீஸாக உள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

படத்தை பிரமாண்டமாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது லைகா நிறுவனம். தர்பார் உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஸ்கிரீன்களில் திரையிடப்பட உள்ளது. 

இந்நிலையில் தர்பார் படம் ரிலீஸான உடனே அது தமிழ் ராக்கர்ஸில் வந்துவிடும் என்ற அச்சம் உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான ரஜினியின் பேட்ட படத்தை ரிலீஸான சில மணிநேரத்தில் ஆன்லைனில் கசியவிட்டது தமிழ் ராக்கர்ஸ். 

இந்நிலையில் தர்பார் படத்தையும் சூட்டோடு சூடாக தமிழ் ராக்கர்ஸ் கசியவிடும் என்று சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. தர்பார் தமிழ் ராக்கர்ஸில் கசிந்தாலும் ஒரு பிரச்சனையும் இல்லை என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். 

மேலும், படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி வருகின்றது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் நடிகர் ரஜினியின் அண்ணாமலை படத்தின் தீம் மியூசிக்கை மெருகேற்றி பயன்படுத்தியுள்ளனர்.

இந்த வீடியோவை வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத், தலைவன்..! வேற ரகம் என்று கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.