அப்பாடா.. - வந்தது மாநாடு படத்தின் அதிகாரபூர்வ அப்டேட் - யார் யார் நடிக்கிறாங்க பாருங்க..!


ஒருவழியா நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் அதிகாரபூர்வ அப்டேட் வந்துடுச்சி. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவிருந்த மாநாடு படத்தின் அறிவிப்பு கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு, நடந்த கூத்துகளை எல்லாம் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

இந்நிலையில், இந்த படம் தொடங்குமா..? இல்லை ட்ராப் ஆகிவிட்டதா..? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்த படம் தொடங்கி விட்டது என்ற தகவல் சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மகிழ்ச்சி படம் ரிலீஸ் வரை நீடிக்க வேண்டும் என்பதே சிம்பு ரசிகர்களின் ஆவலாக உள்ளது. தற்போது, இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன் படி இந்த படத்தில் ஹீரோ படத்தில் ஹீரோயினாக நடித்த கல்யாணி ப்ரியன் கதாநாயகியாக கமிடகியுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன்,பிரேம்ஜி ஆகியோர் ஏனைய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.




Blogger இயக்குவது.