திரௌபதி படம் குறித்த கேள்விக்கு திருமாவளவன் கொடுத்த பதிலை கேட்டீங்களா.?
கடந்த நான்கு நாட்களாக திரௌபதி படத்தின் ட்ரெய்லர் தான் தமிழ்நாட்டில் ஹாட் ட்ரென்டிங். யாரும் எதிர்பாராத வரவேற்பு. க்ரவுட் ஃபண்டிங் முறையில் உருவான முதல் தமிழ் படம்.
ஆம், இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் படத்திற்கு பெரிய அளவிலான தயாரிப்பாளர் இல்லை. பலரின் கூட்டு தயாரிப்பில் படமானது உருவாகியுள்ளது.
ஹீரோவாக நடிகர் அஜித்தின் மச்சான் நடிகர் ரிச்சர்ட் நடித்துள்ளார். கதாநாயகியாக ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த டூலெட் பட நடிகை ஷீலா நடித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அமோக வரவேற்பு பெற்ற நிலையில் இந்த ட்ரெயிலர் பற்றி திருமாவளவனிடம் கேள்வி எழுப்பினார்கள் பத்திரிக்கையாளர்கள். ஆனால், கேள்வியை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த திருமாவளவன் அதற்கு பதில் சொல்லாமல் வேறு ஒரு விஷயத்தை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்.
திரௌபதி படத்தில் உங்களை குறிப்பது போல சில குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. இது பற்றி உங்கள் கருத்து என்ன கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், திருமாவளவனோ டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் தாக்குதல் பற்றி பதிலளித்து கேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.