மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத நடிகர் சூர்யா - கண்கலங்க வைக்கும் வீடியோ.!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிப்பைத் தாண்டி விவசாயிகளுக்கு உதவுவது, கல்வி கற்க முடியாத வாழ்க்கைச் சூழலில் இருக்கும் மாணவர்களை அகரம் அறக்கட்டளை மூலம் அடையாளம் கண்டு அவர்களை படிக்க வைப்பது உள்ளிட்ட சமூக நலப்பணியாற்றி வருகிறார் நடிகர் சூர்யா. 

சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்த அவரது பேச்சு அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரது மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அகரம் அறக்கட்டளை சார்பில் வித்தியாசம் தான் அழகு , உலகம் பிறந்தது நமக்காக என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது. 

இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி மேடையில் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களையும், குடும்ப சூழ்நிலையையும் சோகத்துடன் பேசினார். 

இதைக் கேட்ட நடிகர் சூர்யா மேடையில் கண்கலங்கியவாறு சுமார் 10 நிமிடம் இருந்தார். பின்னர் பேச்சை முடித்து திரும்பிய மாணவிக்கு தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் வந்திருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
Blogger இயக்குவது.