தர்பார் படம் எப்படி இருக்கு..? - ஒரே ஒரு வார்த்தை கூறிவிட்டு ஓட்டம் பிடித்த சிம்பு..!


தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த நடிகர் ரஜினியின் தர்பார் படம் இன்று வெளியாகிவிட்டது. வழக்கம் போல் பட கதை என்ன, ரஜினி எப்படி நடித்துள்ளார் என விமர்சனங்கள் எல்லாம் வந்துவிட்டது. 

ரஜினி ரசிகர்கள் அவரது தலைவரை கொண்டாடி வருகிறார்கள். தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோவிலேயே தர்பார் படத்தை பார்த்துள்ளனர். 

அந்த வகையில், நடிகர் சிம்புவும், தர்பார் படத்தை ரசிகர்களுடன் ரசிகராக பார்த்துள்ளார். படம் முடிந்து வெளியே வந்த அவரிடம் பத்திரிக்கையாளர்கள் படம் எப்படி இருக்கு சொல்லுங்க என்று கேட்டதற்கு "சூப்பர்மா.. சூப்பர்மா..!" என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துவிட்டு காரில் ஏறி  ஓட்டம் பிடித்தார் சிம்பு.
Blogger இயக்குவது.