சசிகலா, சீமான், ஊடகங்கள் என "தர்பார்" படத்தில் ஒன் பை ஒன்னாக போட்டுதாக்கிய ரஜினிகாந்த்..!


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள தர்பார் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரஜினியின் ஸ்டைல், சேட்டை, யோகி பாபுவின் காமெடி என பெருவாரியான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அரசியலில் என்ட்ரியாகவுள்ள ரஜினி இந்த படத்தில் சில அரசியல் புள்ளிகளையும், பணம் வாங்கி கொண்டு 24 மணி நேரமும் ஒரு கட்சிக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே ஒளிபரப்பும் ஊடகங்களையும் வச்சி செய்துள்ளார்.

கைதி ஆள் மாறாட்டம் பற்றி பேசும் ஒரு காட்சியில் தென்னிந்தியாவில் கூட ஒருத்தர் ஷாப்பிங்-லாம் போய்ட்டு வர வீடியோவை நாங்க பாத்தோம் என்று ஒரு அதிகாரி கூறுவது போன்ற காட்சி சசிகலாவை தாக்கியுள்ளது.

மேலும், மும்பைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் போதுமும்பையில் இருக்கும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் நாங்களும் தமிழ்நாடுதான் சார் என்று கூறுவார்கள். அதற்கு ரஜினி, எனக்கும் கிருஷ்ணகிரி நாச்சிகுப்பம் தான் என்று கூறுவார். இதன் மூலம் ரஜினியை தமிழரே அல்ல என்று கூறி வரும் சீமானை ஒரு தாக்கு தாக்கியுள்ளார்.

அதன் பிறகு, முக்கியமாக ஒருதலை பட்சமாக செயல்படும் ஊடகங்களை போட்டு தாக்கும் படி ஒரு காட்சியில் இந்த தொலைக்காட்சி சேனல் தான் உங்களை பற்றி தொடர்ந்து அவதூறாக செய்தி வெளியிட்டு வந்தது என ரஜினியுடன் இருக்கும் சக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுவார்.

இப்படி ஒன் பை ஒன்னாக போட்டு தாக்கும் ரஜினியை அவரது ரசிகர்கள் விசிலை பறக்கவிட்டு கொண்டாடி தீர்த்தனர்.


Powered by Blogger.