"தர்பார்"- படம் எப்படி இருக்கு..? - திரை விமர்சனம்..!


டெல்லியில் யாருக்கும் அஞ்சாத தனிக்காட்டு ராஜாவாகஅட்டூழியம் செய்யும் ரவுடிகளை என்கவுண்டர் என்ற பெயரில் போட்டு தள்ளும் போலீஸ் தான் ரஜினி. முருகதாஸ் படத்தில் ஹீரோயின்களுக்கு பெரிய வேலை எதுவும் இருக்காது. 

இந்தபடம் அதற்கு விதி விலக்கல்ல, ஹீரோயின் என்று செல்வதற்கு ஒருவராக இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். யோகி பாபுவின் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. 

மொத்த படத்தையும் தன் தோல் மேல் தூக்கி வைத்துக்கொண்டார் ரஜினி. விறுவிறுப்பாக செல்லும் முதல் பாகம். எமோஷனல், சண்டை என நகரும் இரண்டாம் பாதி. மனதை நெருடும் க்ளைமாக்ஸ் என முடிகின்றது படம்.

டெல்லியில் இருந்து மும்பைக்கு மாற்றப்படும் போலீஸ் ரஜினி. மும்பைக்கு வந்த அடுத்த நாளே ஒட்டுமொத்த மும்பையையும் ஆட்டிப்படைக்கும் சில முக்கிய புள்ளிகளை அலேக்காக தூக்குகிறார். 

அதில், தொழிலதிபர் ஒருவரின் மகனும் அடக்கம். ஒரு கட்டத்தில் தன்னுடைய பவரை பயன்படுத்தி தனது மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுகிறார் தொழிலதிபர். 

ஆனால், விடுவாரா நம்ம ஆதித்ய அருணாச்சலம்.பக்கவாக ப்ளான் போட்டு தொழிலதிபரின் மகனை போட்டு தள்ளி விடுகிறார். அவனை கொலை செய்த பிறகு தான் அவன் தொழிலதிபரின் மகன் மட்டமல்ல என்பது...! அதன் பிறகு வேகமெடுக்கிறது திரைக்கதை.  

பல இடங்களில் யூகிக்க கூடிய காட்சிகள் இருந்தாலும் படத்திற்குள் ரசிகர்கள் வந்து விடுகிறார்கள்.துப்பாக்கி படம் போல விறுவிறுப்பாக சென்றாலும் பெரிய சஸ்பென்ஸ் ஒன்றும் இல்லாதது சிறிய ஏமாற்றம். வில்லனை இன்னும் கொஞ்சம் கூட டெரராக காட்டியிருக்கலாமோ.? என தோன்றுகின்றது. 

சில இடங்களில் பின்னணி இசை காதை கிழிக்கின்றது. சவுண்டை கம்மி பண்ணுங்கப்பா என்று சொல்லும் அளவுக்கு இரைச்சல். மொத்தத்தில், கிளாஸ் டாப்பராக வருவார் முருகதாஸ் என்று எதிர்பார்த்த நிலையில், ஜஸ்ட் பாஸ் ஆகியுள்ளார் இந்த ஆதித்ய அருணாசலம்.
Blogger இயக்குவது.