முன்னணி நடிகருடன் மூன்று படங்களில் ஜோடியாக நடித்து - நான்காவது படத்தில் அக்காவாக நடிக்கும் திரிஷா..!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகை திரிஷா "உனக்கும் எனக்கும்" "பூலோகம்" "சகலகலா வல்லவன்" படங்களில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், மூன்று படங்களில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த இவர் நான்காவது படத்தில் அவருக்கு அக்காவாக நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களின் புருவத்தை உயர வைத்துள்ளது.
ஆம், இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் தான் மணிரத்தினம் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன்.
இப்படத்தில் குந்தவை பிராட்டியார் கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா, ராஜராஜா சோழன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வருகிறார்கள்.குந்தவை பிராட்டியார் ராஜ ராஜ சோழனின் சகோதரி என்பது குறிப்பிடதக்கது.