விவாகரத்தான நிலையில் புதுக்காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் விஷ்ணு விஷால்..!
தமிழ் சினிமாவில் இன்னமும் வளரும் நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், இயக்குனரும், நடிகருமான நட்ராஜ் மகள் ரஜினிக்கும் 2011ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இருவரும் கடந்தாண்டு பிரிந்தனர்.
இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் விஷ்ணு விஷால், பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவைக் காதலிப்பதாக செய்திகள் வந்தன. தற்போது இருவரும் காதலிப்பது உறுதி ஆகியுள்ளது. ஜுவாலா கட்டாவும் பிரபல பேட்மிண்டன் வீரர் சேத்தன் ஆனந்த்தை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர்.
புத்தாண்டை முன்னிட்டு, ஜுவாலா கட்டா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், அவரை, விஷ்ணு விஷால் முத்தமிடுவது போன்ற புகைப்படத்துடன், 'ஹேப்பி 2020” எனப் பதிவிட்டுள்ளார். ஜுவாலா கட்டா டுவிட்டரில் வெளியிட்டுள்ள மற்றுமொரு புகைப்படத்தையும் விஷ்ணு விஷால் ரி-டுவீட் செய்துள்ளார்.
அதோடு, அவருடைய மகன் ஆர்யன் உடன் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா திருமணம் விரைவில் நடக்கலாம் எனத் தெரிகிறது.