இது என்ன புது வம்பு.!? - தர்பார் ரஜினிகாந்த் மீது ராணுவ வீரர் வழக்கு - இதுக்கெல்லாமா கேஸ் போடுவாங்க..???


தர்பார் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் பல தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காமல் திணறி வருகின்றனர். படம் வெளியான நாளிலேயே பிரபல அரசியல் பிமுகர் சசிகலா-வை மறைமுகமாக தாக்கியுள்ளார் என்று சர்ச்சைகள் எழுந்தன.

இதனை தொடர்ந்து அந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ரஜினிகாந்த் மீதும் இயக்குனர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைதொடுத்துள்ளார்.

அந்த வழக்கின் மனுவில், தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் வேடமேற்று நடித்துள்ளார். ஆனால, ஹிப்பி தலைமுடி மற்றும் சவரம் செய்யாத முகத்துடன் நடித்துபோலீஸ் துறைக்கு கலங்கம் ஏற்படுத்தியுள்ளார். 

மேலும் நான் கமிஷனர் அல்ல ரவுடி என்று பேசும் வசனம், போலீஸ் மற்றும் ராணுவத்தினரை கொச்சைபடுத்தும் வகையில் உள்ளது. எனவே இந்தப் படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதை அறிந்த ரசிகர்கள் இப்படியெல்லாமா வழக்கு போடுவார்கள் என்று ஷாக் ஆகி கிடக்கிறார்கள். படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நான் எடுத்த வேலையை முடிக்காமல் பாதியில் நிறுத்தவே மாட்டேன். அதுவரைக்கும், சவரம் செய்யவும் மாட்டேன்.என்று தன்னுடைய உயர் அதிகாரியிடம் அனுமதிவாங்குவது போல காட்சி படத்தில் உள்ளது.

மேலும், நான் போலீஸ் இல்ல பொறுக்கி என விக்ரம் வசனம் பேசும் போதும், பல படங்களில் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது போலவும், போதை வஸ்துக்கள் பயன்படுத்துவது போலவும் காட்சிகள் வந்த போது இந்த ராணுவ வீரர் எங்கே போனார், இப்போது ரஜினி தாடி வைத்து விட்டார் என்று கிளம்பி வந்து விட்டார். தன்னுடைய சுய விளம்பரதிர்க்காகவே இந்த வழக்கை தொடுத்துள்ளார் என்று ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.