பொன்னியின் செல்வன் மற்றும் M🔺STER ஃபர்ஸ்ட்லுக் - என்ன நடக்குது தமிழ் சினிமாவில்..? - ரசிகர்கள் அதிருப்தி..!


லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து  தயாரிக்க மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். 

கல்கி எழுதிய நாவல் தான் திரைப்படமாக உருவாகி வருகிறது. கல்கியின் வர்ணனையான தமிழ் ஆளுமையைப் படித்த வாசகர்களுக்கு அவருடைய எழுத்து நடையின் மீதே தீராக காதல் வந்ததும் உண்டு. 

அந்த நாவலைப் படித்தவர்களுக்கு தமிழார்வம் இன்னும் அதிகம் வந்திருக்கும். ஆனால், இப்போது படமாக எடுப்பவர்களுக்கு அந்த ஆர்வம் இல்லையோ..? எனக் கேட்க வைக்கிறது. 

நேற்று இப்படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்டார்கள். அந்த போஸ்டரில் வெறும் ஆங்கில வார்த்தைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. தமிழில் திரைப்படமாக உருவாக்கப்படும் முழுக்க முழுக்க தமிழை மட்டுமே அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட தமிழ் நாவலின் திரை வடிவத்திற்கு வெறும் ஆங்கிலத்தில் மட்டும் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். 

ஆனால், இது வரை தமிழில் போஸ்டரை வெளியிடவில்லை. மேலும், இப்படத்தை உலகப் படமாக மட்டும் வெளியிட்டால் போதாது, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி ரசிகர்களுக்காகவும் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

எனவே, அனைத்து இந்திய மொழிகளிலும் படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழில் கூட போஸ்டர் வெளியிட வில்லை. இப்படித்தான் சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் M🔺STER படத்தின் போஸ்டர் கூட தமிழில் வெளியிடப்படவில்லை. அதிலும், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் பட்டியலில் இருக்கும் மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தில் ஆரம்பத்திலேயே இப்படி ஒரு குறை இருப்பது ஆச்சரியம்தான். 

என்ன நடக்கிறது தமிழ் சினிமாவில் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Powered by Blogger.