இன்னுமா சார் அதை நியாபகம் வச்சிருகீங்க - அஜித்தை பார்த்து பிரமித்து போன VJ ரம்யா.!


தமிழ் சினிமாவின் முடி சூடா மன்னன் நடிகர் அஜித். உச்ச நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்திற்கு போட்டியாக தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்து அதில் வெற்றியும் கண்டவர். 

நடிகர் அஜித் என்பதை தாண்டி அஜித் என்ற தனி மனிதனுக்கான ரசிகர் கூட்டம் தான் இங்கே அதிகம். ஆனால், இவர் மீடியா மற்றும் பொது நிகழ்ச்சிகள் எதற்கும் கலந்துகொள்வதில்லை. 

அவரை சந்தித்து பேசிய பிரபலங்கள் பலர் அவரது குணம் பற்றி பிரமிப்பாக பேசி நாம் கேட்டிருப்போம். அந்த வகையில், தப்ரோது அஜித்தை சந்தித்த தருணம் பற்றி பிரபல டிவி தொகுப்பாளினி VJ ரம்யா பேட்டி அளித்துள்ளார். 

பில்லா படத்தின் ரிலீஸ் சமயத்தில் இவர் அஜித்தை சந்தித்து பேட்டி எடுக்க சென்றுள்ளார். அதன் பிறகும் சிலமுறை எதேட்சையாக சந்தித்து பேசியுள்ளாராம். 

அஜித்தை சந்தித்த போது, ஒரு முறை இவரது வீட்டின் நாய் பெயரை எதேர்ச்சையாக கூறியிருந்தாராம். பிறகு, பல ஆண்டு காலத்திற்கு பிறகு அஜித்தை சந்தித்த போது, "உங்க டைகர் எப்படி இருக்கு, அம்மா எப்படி இருக்காங்க..?" என்று அஜித் கேட்டாராம். 

இன்னுமா சார் அதை நியாபகம் வச்சிருகீங்க என்று பிரமித்து போனாராம் VJ ரம்யா.
Powered by Blogger.