இந்த 10 விஷயங்கள் தான் உங்கள் காதலி உங்களை கழட்டி விடுவதற்கான காரணங்கள்..!


ஆண்களை விட்டு பெண்கள் பிரிந்து செல்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனாலும் கூட, சில மிகவும் முக்கியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில், பெண்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் உறவை துண்டித்து கொள்ள மாட்டார்கள். இப்போது ஆண்களை பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் அல்லது கழட்டி விடுகிறார்கள் என்பதற்கான சில பொதுவான காரணங்களைப் பாப்போம்:  

போதுமான வருமானம் இல்லாதது 


புத்தியுள்ள எந்த ஒரு பெண்ணும் போதிய சம்பாத்தியம் இல்லாத ஆணுடன் சேர்ந்து வாழ விரும்ப மாட்டாள். தன்னுடைய வருமானத்தை விட குறைவாக சம்பாத்திக்கும் ஆண்களும் இதே கதியே. சரி, அப்படியானால் அந்த அளவு எவ்வளவு? அது பெண்ணுக்கு பெண் மாறுபடும்.  

நீங்கள் மிகவும் பக்குவமில்லாதவர்களாக இருத்தல் 


தங்களுடைய மனைவியின் ரூபத்தில், ஆண்கள் தாயை எதிர்பார்ப்பதை போல, தங்கள் கணவனின் ரூபத்தில், பெண்கள் தந்தையை எதிர்ப்பார்ப்பார்கள். அதனால் தான் பக்குவமில்லாமல் தங்கள் கணவன் நடப்பது பெண்களுக்கு பிடிப்பதில்லை. ஏதோ சில சந்தர்ப்பங்களில் நடக்கிறது என்றால் அவர்கள் பொறுத்து கொள்வார்கள். ஆனால் இதே குணம் உங்களிடம் நிரந்தரமாக தொடர்ந்து நீடித்தால், கண்டிப்பாக உங்களை ஒரு நாள் தூக்கி எறிந்து விடுவார்கள்.  

அவர்களுக்கு தொழில் ரீதியான ஊக்குவிப்பு கொடுக்காமல் போவது 


முன்பெல்லாம், “சம்பளத்தை கேட்காதே” என்ற விதி ஆண்களுக்கு மட்டுமே பொருந்தியது. ஆனால் இன்று ஆணுக்கு பெண் சமநிலை போட்டியாளராக திகழ்கிறார்கள். அதனால் அவர்களை தொழில் ரீதியாக நீங்கள் ஊக்குவிக்கவில்லை என்றாலோ, அல்லது தொழில் ரீதியாக தேவையற்ற தொந்தரவை கொடுத்தாலோ, உங்களை அவர்கள் தூக்கி எறிந்து விடுவார்கள்.  

 

பாலியல் ரீதியாக கையாளுவது 


உங்களை பொறுத்த வரை, உங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என நினைத்து அதற்கான காலடிகளை வேகமாக எடுத்து வைக்க முயற்சிப்பீர்கள். அதனால் அவர்களிடம் நீங்கள் உரிமை எடுத்துக் கொண்டு, பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபடும் போது, அவர்களிடம் நீங்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறீர்கள் என நினைத்து உங்களை விட்டு பிரிய முயற்சிப்பார்கள்.  

மேலும், திருமணத்திற்கு முன்பு உறவு கொள்ள முயற்சி செய்வது இருவரின் சம்மதத்துடன் நடக்க வேண்டும். உங்கள் காதலிக்கு விருப்பம் இருக்கிறதா..? என்பதை உறுதி செய்ய பின்னரே அதற்க்கான நடவடிக்கைகளை முழு பாதுக்காப்புடன் செய்ய வேண்டும்.

இன்னும் சிலர் என்னுடைய காதலி தானே என முரட்டுத்தனமாக அவருடைய உடல் பாகங்களுடன் விளையாடுவார்கள். சில சமயம் அது அவர்களுக்கு வெறுப்பை உண்டாக்கலாம். அதுவே உங்களை பிரிந்து விடவும் வாய்ப்பாக அமைந்தது விடும் உஷார் .

விரைவிலேயே திருமணம் செய்ய கேட்கலாம் 


உங்கள் காதலியை நீங்கள் விரைவிலேயே திருமணம் செய்ய கேட்கலாம். அவருக்கோ இந்த உறவு கழுத்தை நெறிப்பதை போன்ற உணர்வு ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரத்தில், அவர் உங்களை நிராகரித்துவிடவும் வாய்ப்புள்ளது.  

வாழ்க்கையில் செட்டில் ஆவது 


 இப்போதைக்கு திருமணம் செய்யும் உத்தேசம் இல்லை என்ற உங்கள் எண்ணத்தை உங்கள் காதலி தெளிவாக புரிந்து கொண்டிருக்கலாம். உறுதியான எதிர்காலம் இல்லாத உறவை தொடர பெண்கள் பொதுவாக விரும்பவதில்லை. இது அவர்களிடம் பாதுகாப்பின்மை உணர்வை அலாதியாக ஏற்படுத்தும்.  

அவருக்கு குடும்பம் தேவைப்படும், உங்களுக்கு தேவைப்படாது 


பெண்கள் தங்களுக்கென குடும்பம் மற்றும் குழந்தைகள் என அமைத்து கொள்வதில் மிகவும் குறியாக இருப்பார்கள். அவர்களுக்கு குழந்தை குட்டி என பெரிய குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆசை இருந்து, உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லாமல் இருந்தால், அவர்கள் உங்களை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். பெண்கள் சமரசம் செய்துகொள்ளாத விரும்பாத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.  

 

உங்களின் தாய் அவர்களை மதிக்காமல் நடப்பது 


 பொதுவாக தன் காதலனை வளர்த்த தாய், அவருடன் எப்படி நடந்து கொள்வாரோ, அதே அளவிற்கு அதே குணத்துடன் தான் திகழ்வார்கள் என்பது பெண்களின் பொதுவான நம்பிக்கையாகும். ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல், அவளுக்கும் உங்கள் தாய்க்கும் ஒத்து போகாமல், நீங்கள் உங்கள் தாய்க்கு எப்போதும் ஆதரவாக பேசினால், அவருக்கு உங்கள் மீதும் ஒரு கடுப்பு உண்டாகலாம். இதனாலும் பிரியக்கூடும்.  

 

வேலை நிமித்தமாக அவர்கள் பிரிந்து செல்லுதல் 


அவர் உங்களை அதிகமாக நேசித்தால், அவருடன் சேர்த்து உங்களையும் உடன் வரச் சொல்வார். வேறு வேலை தேடி நீங்கள் அங்கே இடம் பெயர உங்களுக்கு போதிய அவகாசமும் கூட அளிப்பார். ஆனால் இப்படி நீண்ட தொலைவில் அதிக நாள் பிரிந்து இருக்க பெண்கள் விருப்பப்படுவதில்லை. அதனால் நீங்கள் போதிய காலத்திற்குள் வந்து சேரவில்லை என்றால், அவரை மறந்து விட வேண்டியது தான்.  

உங்கள் மீது சலிப்பு ஏற்பட்டிருக்கும் 


ஆண்களின் மீது பெண்களுக்கு சுலபத்தில் சலிப்பு ஏற்பட்டு விடும். அதனால் தான் என்னவோ, தவறானவர்களை தேடி தான் பெண்கள் செல்வார்கள் என்ற சொல் உண்டு. நீங்கள் மிகவும் நல்லவராக இருந்தால் கூட, உங்கள் காதலி உங்களை விட்டு சென்று விடலாம். அவர்கள் எதிர்பார்ப்பது ஊருடன் ஒத்து வாழ கூடிய ஒரு சராசரி மனிதனைதான். மேற்கண்டவற்றில் உங்கள் காதலி எந்த ரகம் என்பதை கண்டறிந்து அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொண்டால் போதும் உங்கள் துணையை உங்களிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது.
Blogger இயக்குவது.