12 ஆண்டுகளுக்கு பிறகு "வலிமை" படத்தில் அஜித்திற்கு வில்லானாக நடிக்கும் இளம் நடிகர் - மாஸ் அப்டேட்..!


நடிகர் அஜித் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது வலிமை திரைப்படம். இந்த படம் வெளியாக இன்னும் 8 மாதங்கள் உள்ளது. அதனால், பெரிய அப்டேட் எதுவும் படக்குழு தரப்பில் இருந்து எதிர்பார்க்க முடியாது.

வரும் அப்டேட்டுகள் கூட நம்ப தகுந்த வட்டாரங்களிடமிருந்து அதிகாரப்பூர்வமற்ற தகவலாகவே வருகின்றது. அந்த வகையில், வலிமை படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்து தற்போது ஒரு அப்டேட் வந்துள்ளது. 


அதன் படி, இளம் நடிகர் நவ்தீப் தான் அஜித்திற்கு வில்லனாக நடிக்கவுள்ளாரம். இவர் ஏற்கனவே, அஜித்துடன் "ஏகன்" படத்தில் நடித்திருந்தார். இப்போது, 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் கூட்டணி வைக்கவுள்ளார்.

சமீபத்தில், நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான "சீறு" வில்லனாக மிரட்டியிருந்தார் நவ்தீப் என்பது குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.