தலைவர் 168 படத்தில் சூப்பர் ஸ்டாரின் கெட்டப்-ஐ பாருங்க - இணையத்தில் கசிந்த மாஸ் புகைப்படம்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தலைவர்168 படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம்
சிட்டியில் நடந்து வருகிறது.
அதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற
கையோடு நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார். அடுத்து குஷ்பு பங்கேற்று
நடித்து வருகிறார். இப்படம் குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக இருக்கும் என
கூறப்படுகிறது.
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த படத்தில் ரஜினியின் கெட்டப் புகைப்படமாக வெளியாகியுள்ளது.
பேட்ட.தர்பார் படங்களில் இருந்தது போலவே இளமையான தோற்றத்தில் இருக்கிறார் ரஜினி.