இந்தியன் 2 விபத்து - இயக்குனர் ஷங்கரின் கால் முறிந்தது குறித்து வெளியான தகவல் உண்மையா..? - இதோ விளக்கம்
இயக்குனர் ஷங்கர் இயங்கிவந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் துணை இயக்குனர் ஒருவர் உட்பட மூன்று பேர் நசுங்கி இறந்தனர்.
மேலும் இயக்குனர் ஷங்கரின் கால் முறிந்துவிட்டது என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவுகிறது. கமல்ஹாசன் விபத்து குறித்த வருத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இயக்குனர் ஷங்கர் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வராமல் இருந்தது.
இதனால், ஷங்கரின் நிலை என்ன.? என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். இயக்குனர் ஷங்கர் தீவிரமாக சிகிச்சை பிரிவில் உள்ளார் என பரவிய தகவல் குறித்து விசாரித்ததில் அது உண்மை இல்லை என தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் இயக்குனர் ஷங்கர் வேறு இடத்தில் லைட் செட்டிங் பார்த்துக்கொண்டிருந்ததால் இந்த விபத்தில் அவர் சிக்கவில்லை. தற்போது ஷங்கர் கமல்ஹாசன் என அனைவரும் காயம்பட்டவர்களை மருத்துவமனையில் அருகில் இருந்தே கவனித்து வருகின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
இதனால், இந்தியன் 2 படப்பிடிப்பு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஆரம்பித்ததில் இருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என்று இதற்கு நிச்சயம் பரிகார பூஜை செய்து படக்குழுவினருக்கு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் முன் வரவேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
@LycaProductions should do some Pooja for their production house to remove any bad vibration and bring positivity as they are facing too many probs and contraversies recently. Something is wrong with the production house!#Indian2— Assaultsethuᴰᴬᴿᴮᴬᴿ (@Assaultsethu7) February 19, 2020