இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல - துப்பறிவாளன் 2 குறித்து நடிகர் விஷால்


2017-ம் ஆண்டு விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது. 

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவிருந்த துப்பறிவாளன் 2 படத்துக்கு இசை - இளையராஜா. துப்பறிவாளன் படத்தில் நடித்த பிரசன்னாவும் இதில் நடிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு லண்டனில் தொடங்கியது. எனினும் சமீபகாலமாக மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

படத்தின் பட்ஜெட் தொடர்பாக மிஷ்கின் - விஷால் நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறியுள்ளதாகவும் இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே தொடர்ந்து இயக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. 

மிஷ்கினுக்குப் பதிலாக துப்பறிவாளன் 2 படத்தைத் தான் இயக்குவதை விஷால் உறுதி செய்துள்ளார். இது குறித்து விஷால் கூறுகையில், இப்படி நடக்கும்ன்னு நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அடுத்த வருடம் விலங்குகள் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், இந்த வருடமே நான் இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடிகர் என்றால் இயக்குனர் சொல்வதை நடித்து விட்டு போய்விடலாம்.இயக்குனர் என்பதால் லைட் செட்டிங்கில் இருந்து, எடிட்டிங், ரீ-ரிகார்டிங் என போஸ்ட் ப்ரொடக்ஷன் வரை அனைத்து பொறுப்புகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. அதனை செய்ய ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் விஷால்.

அது சரி, டைட்டில் காட்டில் இயக்குன் என்று யார் பெயரை போடுவார்கள். பாதி படம் மிஷ்கின், மீதி படம் விஷால் என்றா..?
Blogger இயக்குவது.