மிரட்டும் "திரௌபதி" - கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள் - 30 வருடத்தில் இது தான் முதல் முறை - அதிரடி வசூல் நிலவரம்..!
பழைய வண்ணாரப் பேட்டை படத்தை தொடர்ந்து இயக்குநர் மோகன் இயக்கியிருக்கும் படம் திரௌபதி. இதில் இரண்டு சமூகம், நாடகக்காதல், ஆணவக் கொலை ஆகியவற்றை மையப்படுத்தியுள்ளனர் என கூறினார்கள். ஆனால், எந்த சமூகத்தையோ, சாதியை உயர்த்தி பேசும் படியோ, தாழ்த்தி பேசும் படியோ ஒரு காட்சிகள் கூட படத்தில் இல்லை.
இதன் ட்ரெயிலர் ரிலீஸ் ஆன போதே எதிர்ப்பும் ஆதரவும் ஒன்றாக எழுந்தது. படத்தை ரிலீஸ் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் . இந்நிலையில் பல எதிர்ப்புகளை மீறி திரௌபதி படம் நேற்று ரிலீஸ் ஆகியிருக்கிறது.
பல இடங்களில் சிறப்பு காட்சியாக 27-ம் தேதி இரவே காட்சிகள் ஒளிபரப்பாக தொடங்கி விட்டன. இந்தபடத்தை பல தரப்பட்ட அரசியல் தலைவர்களும் பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பெண்கள் விரும்பும் படமாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. வெறும் 50 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் ரிலீசான நாளான நேற்று கொடுத்த ஷேர் மட்டும் 80 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.
தமிழகம் முழுதும் 2 கோடியே 50 லட்ச ரூபாயை முதல் நாளிளேயே வசூல் செய்துள்ளது. கடந்த 30 ஆண்டு கால சினிமா வரலாற்றில் படத்தின் பட்ஜெட்டை காட்டிலும் ஐந்து மடங்கு வசூலை முதல் நாளிலேயே பெற்ற திரைப்படம் திரௌபதி மட்டுமே என்று கூறுகின்றனர் பாக்ஸ் ஆஃபிஸ் வல்லுனர்கள்.