40 கோடி இல்ல, 400 கோடி கேட்டேன் - துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து நீக்கிய விஷாலுக்கு மிஷ்கின் பதிலடி..!


விஷால், மிஸ்கின் கூட்டணியில் உருவாகி ஹிட் அடித்த திரைப்படம் "துப்பறிவாளன்". இந்த படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகின்றது.

இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் மிஷ்கின் தான் இயக்கி வந்தார். பாதி படம் எடுத்து முடித்து விட்ட நிலையில், மிஸ்கின் தற்போது திடீரென வெளியேறிவுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

படத்தின் உத்தேச பட்ஜெட்டை தாண்டி 40 கோடி ருபாய் அதிகம் மிஸ்கின் கேட்டதாகவும், அதை தயாரிப்பாளரான விஷால் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

இதனால், மீதமுள்ள படத்தின் காட்சிகளை விஷாலே இயக்கவுள்ளார். இதை அவரும் உறுதி செய்துள்ளார். 

இந்நிலையில், இது பற்றி மிஸ்கினிடம் கேட்டதற்கு "40 கோடி கேட்கல.. 400 கோடி கேட்டேன். 100 கோடியில் பாதி படத்தை முடித்துவிட்டேன். மீதி படத்திற்கு 100 கோடி வேண்டும். அதிலும், கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் சாட்டிலைட்டில்-ல் இருந்து குதிப்பது போன்ற காட்சிக்கு மட்டும் 100 கோடி செலவு. அதனால் மொத்தமாக 400 கோடி கேட்டேன்" என விஷாலை விளாசும் விதமாக நக்கல் பதில் ஒன்றை கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.