"தர்பார்" படத்திற்கு பிறகு "திரௌபதி" தான் - பிரபல திரையங்கமே வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்..!


நாட்டுக்குள்ள ஆயிரம் ஜாதியை வைத்துக்கொண்டு திருமணம் செய்ய ஜாதி வாரியாக வெப்சைட்டுகள் வைத்துக்கொண்டு ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில், ஜாதிகள் உள்ளது என்று கூறினால் தான் ஒரு சமத்துவத்தையும் சமநிலையையும் நோக்கி செல்ல முடியும் என்பதை கூறும் பாடமாக வெளியாகியுள்ளது திரௌபதி படம். 

ஜாதி இல்லை, ஜாதி கொடுமை, ஜாதி மறுப்பு என தங்களை ஜாதிகளுக்கு எதிரானவர்கள் என்பது போல் பம்மாத்து செய்துகொண்டு சதாசர்வ காலமும் ஜாதியை சுற்றியே அரசியல் செய்து கொண்டிருக்கும் கும்பலை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை பொட்டில் அடித்தார் போல சொல்லியுள்ளது திரௌபதி திரைப்படம். 

பொதுவாக ஜாதி பற்றி படம் எடுத்தாலே சர்ச்சைதான் என்கிற நிலையில் இன்று திரைக்கு வந்துள்ளது திரௌபதி படம். "நாடக காதல்" பற்றியும், அதனால் அழிந்த குடும்பங்கள் பற்றியும் பேசியுள்ளது இந்த படம். 

இந்த படத்திற்கு முன்னணி ஹீரோக்களுக்கு கிடைக்கும் அளவுக்கு அதே வரவேற்ப்பு கிடைத்துள்ளதை கண் கூடாக பார்த்து வருகிறோம். 

இந்நிலையில், இந்த படத்திற்கு வரவேற்பு எப்படி உள்ளது என்பது பற்றி பிரபல திரையரங்கமான நெல்லை ராம் சினிமாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தர்பார் படத்திற்கு அடுத்து திரௌபதி படத்திற்கு தான் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது என கூறியுள்ளனர்.
Powered by Blogger.