ரஜினியை விமர்சிக்க வாயை வாடகைக்கு விட்ட பிரபலங்கள் - இதெல்லாம் ஒரு பொழப்பா..?? - காரி துப்பும் ரசிகர்கள்..!
நடிகர் ரஜினிகாந்த் 2021-ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். இது, பல கட்சிகளுக்கு கிலியை கிளப்பியுள்ளது. குறிப்பாக, தி.மு.க-விற்கு. ஆன்மீக அரசியலை முன்னெடுத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
இதற்கு, பொது மக்கள் மத்தியில்ஏகபோக ஆதரவு பெருகி வருகின்றது. இந்நிலையில், தி.மு.க புதிதாக பிரபல அரசியல் ஸ்ட்ரேடெஜிஸ்ட் மற்றும் I-PAC என்ற நிறுவனத்தின் நிறுவனருமான பிரஷாந்த் கிஷோர் என்பவரை தேர்தல் பணி ஆலோசகராக பணிக்கு அமர்த்தியுள்ளது.
இவர்களுடைய வேலை தி.மு.க-விற்கு ஆதரவாக வேலை செய்வது கிடையாது. மாறாக, திமுக-வை எதிர்பவர்களை கட்டம் கட்டி தாக்குவது தான்.இதற்காக, பல கோடிகளை செலவு செய்கிறார்கள்.
இப்போதைய சூழ்நிலையில், திமுக-விற்கு பிரதான எதிரியாக நிற்பவர் நடிகர் ரஜினிகாந்த் தான். எனவே, திரையுலக பிரபலங்கள், ரஜினிக்கு எதிரான மனநிலை உள்ள திரை பிரபலங்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை ரஜினிக்கு எதிரான கருத்துகளை தொடர்ச்சியாக சொல்ல சொல்லிக்கொண்டே இருப்பது தான் இவர்களின் வேலை.
இந்த வேலையை பிரஷாந்த் கிஷோர் ஆரம்பித்து விட்டார். கடந்த சில தினங்களாக தர்பார் படத்தினால் நஷ்டம் என ரஜினியை டார்கெட் செய்து அவருடைய பெயரை டேமேஜ் செய்ய இறங்கி விட்டார்கள். முதல் ஆளாக, டி.ராஜேந்தர் களத்தில் குதித்தார்.
ஏனென்றால்,டி.ராஜேந்தர் தான்இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் நட்டம் ஆன படங்களுக்கு நஷ்ட ஈடு பெற்று கொடுத்துள்ளார். தன்னுடைய மகன் சிம்பு AAA என்ற படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளரிடம் 20 கோடி ரூபாயை நட்டம் செய்து விட்டு அவரை ரோட்டில இழுத்து போட்டது எல்லாம் இவருக்கு தெரியாதாம்.. ரஜினி நட்டம் ஏற்ற்படுதியது மட்டும் தெரியுதாம். பாத்துகோங்க மக்களே. T.R அவர்களே.. உங்க மகன் சிம்பு நட்டம் ஏற்படுத்திய தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிற்கு ஆதரவாக உங்க வாய் திறக்காதா..??
அதற்கடுத்தபடியாக, இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் த. பாண்டியன் ரஜினிக்கு எதிரான கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியதை கேளுங்க, " நாட்டில் எத்தனை மாநிலங்கள் இருக்கிறது என்பது கூட ரஜினிக்கு தெரியாது;
பட்ஜெட்டிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதும் அவருக்கு தெரியாது. விநியோகஸ்தர்களை காப்பாற்ற முடியாத ரஜினி, மக்களை காப்பாற்ற போகிறாரா..?" என்று கம்பு சுத்தியுள்ளார்.
இதன் மூலம், இவர்கள் ரஜினிக்கு எதிராக பேச தன்னுடைய வாயை வாடகைக்கு விட்டு விட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இன்னும், எத்தனை பேர் தங்களுடைய வாயை வாடகைக்கு விட்டுள்ளார்கள் என்று வரும் நாட்களில் பார்க்கலாம்.
ஊழல் செய்து கோடி கோடியாக கொள்ளை அடித்து வைத்து அரசியல் கட்சிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ரஜினிக்கு எதிராக கம்பு சுத்தும் இது போன்றவர்களை பார்த்து காரி துப்பி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
ஊழல் செய்து கோடி கோடியாக கொள்ளை அடித்து வைத்து அரசியல் கட்சிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ரஜினிக்கு எதிராக கம்பு சுத்தும் இது போன்றவர்களை பார்த்து காரி துப்பி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.