உடல் எடை குறைக்க எளிய வழிகள் - இதை முயர்சி செய்து பாருங்கள்..!

இன்று  சுட்டீஸ்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை அதிகப்படியான எடை. உய ரத்துகேற்ற எடை இருந்தால் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. ஆனால் அதிகப்படியான எடை மேலும் மேலும் அதிகரி க்க தொடங்கும்போது அவை உடலிலும் பல நோய்களை உண்டாக்க தொடங்குகிறது.
 
இரத்த அழுத்தம், நீரிழிவு. தைராய்டு, ஹார்மோன் சுரப்பில் மாற்றம், மன அழுத்தம் என்று பிரச்சனைகளை வரிசை கட்டி வரவைக்கிறது. வயதான பிறகு வரும் உபாதைகள் 30 வயது தொடரும் போதே வந்துவிடுகிறது.இத்தகைய பிரச்சனைக ளை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில் ஆரம்ப கட்டத்திலேயே உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யவேண்டும்.

உடற்பயிற்சி, உடல் உழைப்பு தவிர்த்து உண்ணும் உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்படி சாப்பிட வேண்டிய உணவுகள் ஆரோக்கியத்தையும் குறைத்துவிடக்கூடாது என்ன மாதிரியான உணவுகளை எடுத்துகொள்ளலாம் பார்க்க லாமா?
 
 உடல் எடையை குறைக்க எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் சிலருக்கு அந்த கனவு கைகூடுவதே இல்லை. உடல்நலம் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக இன்று தெருவுக்கு ஒரு ஜிம் இருப்பதை நம்மால் காணமுடிகிறது.

உடல் எடை குறைய உடற்பயிற்சி செய்தால் போதும் என்று இருந்துவிடுவது எந்த பலனையும் தராது. வாழ்க்கை முறையிலும், உணவிலும் உரிய மாறுதல்களை ஏற்படுத்தாமல் உடல் எடையை குறைப்பது சாத்தியமற்றது. இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நமது உணவுப் பழக்கம் பெரும் மாற்றம் கண்டுள்ளது. உடல் எடை குறையாமல் இருக்க இது ஒரு முக்கிய காரணமாகும்.

மரபியல், பழக்கவழக்கங்கள், வளர்சிதை மாற்றம் (metabolism) மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index) ஆகியவை ஒருவரின் உடல் எடையை தீர்மானிக்கிறது. சீரான உடல் எடை பராமரிப்பதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். எடை கூடினால் உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படக்கூடும்.

உடல் எடையை சீராக பராமரிக்க இவற்றை கடைபிடிக்கவும்:

  •     உணவில் கவனம் தேவை
  •     போதியளவு தூக்கம்
  •     காலை உணவை தவிர்க்காதீர்
  •     சுறுசுறுப்பாக இருக்கவும்
  •     தவறாது உடற்பயிற்சி செய்யவும்
  •     புரதச்சத்து அதிகம் எடுத்துக்கொள்ளவும்

உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும்போது இந்த உணவுகளை தவிர்க்கவும்:

  •     குளிர்பானங்கள்
  •     குக்கீஸ், கேக்
  •     உருளைக்கிழங்கு சிப்ஸ்
  •     கொழுப்பு மிகுந்த சிவப்பிறைச்சி
  •     மல்டி-கிரெய்ன் பிரெட்
  •     மைக்ரோவேவ் பாப்கார்ன்
  •     பீட்சா
  •     மாம்பழம், வாழைப்பழம், திராட்சை
  •     சோயா சாஸ்
  •     ஐஸ்கிரீம்
  •     சாக்லேட்
  •     எண்ணெயில் பொரித்த உணவுகள்
  •     தர்ப்பூசணி பழம்
  •     மதுபானம்
  •     பிரஞ்சு பிரைஸ்
Blogger இயக்குவது.