பகல் நேரத்துல நடிச்சு கொடுத்திருந்தா - நாங்க ஏன் இதை பண்ண போறோம்..? - விபத்திற்கு காரணமே அந்த வேர்ல்டு நடிகர் தானாம்..!
வேர்ல்டு நடிகர் படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் நடந்த விபத்து ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி கொடுத்து விட்டு தயாரிப்பு குழு தான் பொறுப்பை ஏற்க வேண்டும் என வேர்ல்டு நடிகர் ஜூட் விட்டது தயாரிப்பு தரப்பை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.
விபத்து நடந்த நாளன்று படப்பிடிப்பு பகலில்நடப்பது போன்று தான் திட்டமிடப்பட்டதாம். ஆனால், தன்னுடைய தனிப்பட்ட வேலைகளுக்காக இரவு நேரத்தில் தான் வர முடியும் என கூறி விடவே இரவை பகலாக மாற்ற பிரமாண்டமாக பல நூறு லைட்டுகளை தொங்க விட சென்று விபத்து நடந்து மூன்று உயிரிகள் பலியாகியுள்ளது.
சொன்ன தேதியில் , சொன்ன நேரத்துக்கு வராமல் இஷ்டத்துக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார் அந்த நடிகர் எனவும், இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் இந்த படத்தை எடுக்கவே நான் ஒப்புக்கொண்டிருக்க மாட்டோம் எனவும் கூறுகிறது தயாரிப்பு தரப்பு.
அவர் மட்டும் அன்று பகல் நேரத்தில் ஷூட்டிங் வந்திருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காது எனவும் புலம்புகிறார்கள் படக்குழுவினர். மொத்தத்தில் விபத்துக்கு காரணமே நடிகர்தான் என கோபமாக உள்ளதாம் படக்குழு.
தன்னுடைய வேலையை முறையாக செய்யாமல் தயாரிப்பு நிறுவனத்தின் மீது பழியை
போட்டுவிட்டு தப்பிக்க பார்க்கிறார் என வேர்ல்டு நடிகருக்கு எதிராக கிளம்பி விட்டனர் படக்குழுவினர். இதனால், பெரும் அதிர்ச்சியில் உள்ளாராம் அந்த நடிகர்.