"நேர்கொண்ட பார்வை" தெலுங்கு ரீமேக் படத்தின் தலைப்பு இது தான்..!


பாலிவுட்டில் நடிகர் அமிதாப்பச்சன், நடிகை டாப்சி நடித்து வெளிவந்த 'பிங்க்' திரைப்படம் இந்தியா முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த படத்தை தமிழில் நடிகர் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க கடந்த வருடம் 'நேர் கொண்ட பார்வை' என்று ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்து சுமார் வெற்றியைப் பெற்றது. 

இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க, படப்பிடிப்பும் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் தனது கட்சி மூலம் தேர்தலில் நின்று தோல்வியுற்றார் பவன் கல்யாண். 

அதன்பின் அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றார்கள். ஆனாலும், இந்தப் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார். 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து அவரை நடிக்க சம்மதம் வாங்கியதாக ஒரு தகவல் உண்டு. 

இதனிடையே, படத்திற்கு 'வக்கீல் சாப்' எனப் பெயர் வைக்க உள்ளதாகத் தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அடுத்த வாரத்தில் படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட உள்ளார்களாம். ஒரு இடைவெளிக்குப் பிறகு பவன் கல்யாணின் ரீஎன்ட்ரி என்பதால் படத்திற்கு இப்போதே அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
Blogger இயக்குவது.