கவர்ச்சி காட்டமாட்டேன் என்று கூறும் ஸ்ரீதிவ்யாவின் தங்கையா இது..?- தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..!
நடிகர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. ஊதா கலரு ரிப்பன் பாடலும், பாவடை தாவணியில் இவர் காட்டிய ஸ்வீட் அண்ட் க்யூட் ரியாக்ஷன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து ஜீவா, ஈட்டி, மருது, காக்கி சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இளம் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரீதிவ்யா, இதுவரை ஓவர் கவர்ச்சி காட்டி நடித்தது கிடையாது. பாடல் காட்சிகளில் கூட கிளாமர் இல்லாமல் தான் நடிப்பார்.
புடவை, சுடிதார், பாவடை தாவணி என தமிழ் சினிமாவில் வலம் வரும் க்யூட் நடிகை ஸ்ரீதிவ்யா. ஆனால், இவரது தங்கை ஸ்ரீரம்யாவோ, ஸ்ரீதிவ்யாவிற்கு நேர் எதிராக ஓவர் கவர்ச்சி காட்டி நடித்த படத்தின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
யமுனா என்ற படத்தில் ஹீரோயினாக ஸ்ரீரம்யா நடித்திருந்தார். அந்த படத்தில் ஹீரோவுடன் ஓவர் கிளாமரில் ஸ்ரீரம்யா நடித்துள்ள ரொமான்ஸ் காட்சிகளின் புகைப்படங்கள் திடீரென சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், துளிகூட கவர்ச்சி காட்டமாட்டேன் என்பவர் ஸ்ரீதிவ்யா அவருக்கு இப்படி ஒரு தங்கையா..? என நெட்டிசன்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.