விவாகரத்திற்கு நடிகர் தனுஷ் தான் காரணமா..? - அமலா பால் கூறிய ஷாக்கிங் பதில்.!


நடிகை அமலாபால் இயக்குனர் விஜய் திருமணம் விவாகரத்தில் முடிந்தது திரையுலகினர் பலருக்கும் வருத்தமான செய்தி. இந்நிலையில், இயக்குனர் விஜய் பெண் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

நடிகை அமலாபால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் ஒரு பேட்டியில் அமலாபாலின் விவாகரத்திற்கு காரணம் அவர் தனுஷ் படத்தில் நடித்து தான் என்று கூறியிருந்தார். இது பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

இதனை தொடர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அமலாபால், விவாகரத்து என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு. இதற்கு, அவர் காரணம், இவர் காரணம் என்று யாரும் காரணமில்லை. யாரும் பொறுப்பும் இல்லை. மேலும், தற்போது நான் ஒரு நபரை காதலித்து வருகிறேன். விரைவில், அவர் பற்றிய தகவலையும் என்னுடைய இரண்டாவது திருமணம் பற்றிய தகவலையும் வெளியிடுவேன் என ஷாக்கிங் பதிலை கொடுத்துள்ளார்.
Blogger இயக்குவது.