குட்டி ஸ்டோரி இருக்கட்டும் - இந்த க்யூட்டி ஸ்டோரியை பாருங்க - வயிறு எரியும் சிங்கிள்ஸ்..! - வைரலாகும் ரொமான்ஸ் போட்டோஸ்..!


நேற்று "காதலர் தினம்" என்பதால் இதை உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் கொண்டாடினர். 

கடந்த பல வருடங்களாக காதலித்து வரும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். 

நேற்று நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி என்ற பாடல் வெளியாகி ட்ரெண்டாகி வரும் நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய க்யூட்டி ஸ்டோரி-யை கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, "என்னோட க்யூட்டி ஸ்டோரி, நாங்கள் காதலிக்க துவங்கி ஐந்து வருடம் ஆகிறது. எங்களுக்கு, ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான்" என விக்னேஷ் சிவன் பதிவிட்டு சிங்கிள்ஸ்-ன் வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டுள்ளார்.
Powered by Blogger.