இயக்குனர் அவதாரம் எடுத்த விவேக் - முன்னணி நடிகர் ஹீரோவாக நடிக்கிறார்..!
நடிகர் விவேக் ஒரு காலத்தில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர்.வெறுமானே காமெடி மட்டும் பண்ணாமல் அதில் சிந்திக்கும் வகையில் சில கருத்துகளையும் கூறுவதில் விவேக் கைதேர்ந்தவர். இதனால் இவரை குட்டி கலைவாணர் என்றும் கூறுகிறார்கள்.
நடிப்பு மட்டுமின்றி சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார் விவேக். தற்போது, குணசித்திர வேடங்களிலும் நடித்து வரும் விவேக் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அடுத்த கட்டமாக இயக்குனர் அவதாரமும் எடுக்கவுள்ளார்.
இந்த வருடம் இவர் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தின் முன்னணி தமிழ் நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். அவருடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அவர் ஒ.கே சொன்னதும் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறுகிறார்கள் .