"திரௌபதி" எப்படி இருக்கு..? - படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்..! - திரை விமர்சனம்..!


இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் "திரௌபதி". இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து இது குறிப்பிட்ட சாதியினரை தாக்கும் விதமாக எடுக்கப்பட்ட படம் என ஒரு தரப்பினரும், காதல் என்ற பெயரில் பெண்களை தவறாக பயன்படுத்தும் நாடகா காதல் கும்பலுக்கான படம் என்று பிரதானமாக இரு வேறு கருத்துக்கள் எழுந்தன.

சிலர் தலையும் புரியாமல், வாலும் புரியாமல் ட்ரெய்லரை மட்டும் பார்த்து விட்டு இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று பொங்கினார்கள். இந்நிலையில், இன்று இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நிகரான வரவேற்ப்பை பெற்றுள்ளது. 

இந்த படம் எதற்க்கான படம்.? நாடகக் காதல் செய்து பெண்களை ஏமாற்றுவதால் குடும்பங்கள் சிதைந்து போகின்றது. அதற்கு காரணமான வில்லன் கும்பலை கதையின் நாயகன் என்ன செய்கிறார் என்பது தான் படத்தின் பிரதான கதை. 

படத்தில் தோன்றும் வில்லன், வசதியான வீட்டு பெண்களை கரெக்ட் பண்றதுக்கு தன்னிடம் சரக்கும் முறுக்குமாய் என்கிட்டே 100 பசங்க இருக்காங்க, அவங்களுக்கு ஜீன்ஸ் பேண்டு, டிசர்ட்டு, தங்கசங்கிலியும், இருசக்கரவாகனத்துடன் ஐபோனும் இலவசமாய் கொடுத்து வசதியான வீட்டு பெண்களை காதலிப்பது போல ஏமாற்றி பணம் பறிக்க சொல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ரசிகர்களிடம் அமோக வரவேற்ப்பு பெற்றுள்ள இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள். வாங்க பாக்கலாம்,









Blogger இயக்குவது.