உங்களுக்கு தான் அவர் தல - எனக்கு இல்லை - நடிகை வனிதா பளீர் பேட்டி..!


தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் படு பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் வீட்டில் இருந்தவரை செம்ம கலாட்டாவாக இருந்து வந்தது. எல்லோரையும் இவர் அடக்குவது, யார் பேச்சையும் கேட்காதது என வீட்டிற்குள் வனிதா அடவாடி செய்தார். 

இதை தொடர்ந்து இவருக்கு நல்ல வெளிச்சம் கிடைக்க, விஜய் டிவியிலேயே பல ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கொண்டு வருகின்றார். அதோடு வனிதா சமீபத்தில் பேட்டிக்கொடுத்துள்ளார், அதில் அஜித் குறித்து அவரிடம் கேட்டனர். 

அதற்கு வனிதா ‘உங்களுக்கு தான் அவர் தல. ஆனால், எனக்கு அப்படி கிடையாது. எனக்கு அவரை அஜித்தாக முதல் தெரியும், சூப்பர் ஜெண்டில் மேன் அவர். 

தன் குழந்தைகளுக்கு நல்ல அப்பா, தன் மனைவிக்கு நல்ல கணவர் என்று இருக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை அவர் என்னிடம் ஒரே மாதிரி தான் இருக்கின்றார், எந்த மாற்றமும் இல்லை. 

இன்று இந்த உயரத்தை அவர் அடைந்தாலும் அவரிடம் மற்றவர்களிடம் பழகும் முறையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Blogger இயக்குவது.