ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் ஏழு கெட்டப் - மிரட்டும் சியான்..! - வைரலாகும் "கோப்ரா" ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!


அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. அதற்காகவே மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் வண்ணம் கோப்ரா என ஒரே தலைப்பை படக்குழு வைத்திருக்கிறது. 

சினிமாவுக்கே தன்னை அர்பணித்துக்கொண்டு கடினமான உழைப்பாளியான விக்ரமுக்கு சமீப காலமாக எந்த படமும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. 

அதேநேரம் அவரது படங்கள் ஒவ்வொன்ருமே அவரை தனித்துவமாக நிலைநிறுத்துகின்றன என்றாலும் வசூல் நிலவரம் தான் கவலை அளிக்கிறது.

விக்ரம் தனித்துவமான கதைகளை தேர்வு செய்த்வதில் காட்டும் முனைப்பை அந்த படங்களின் திரைக்கதை மற்றும் ஸ்க்ரிப்டில் காட்டினால் நிச்சயம் விக்ரம் ஹிட் படங்களை கொடுக்க முடியும் என்கிறார்கள் பொதுவான ரசிகர்கள்.

எனவே இந்த கோப்ரா திரைப்படம் அதை மாற்றும் என நம்பலாம். விக்ரம் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். கோப்ரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 


இந்நிலையில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதில் ஏழு கெட்டப்பில் இருக்கிறார் சியான்.. இதோ அந்த போஸ்டர்


Powered by Blogger.