அஜித் மட்டும் இதை செய்து விட்டால் அது தான் எனக்கு கிடைத்த விருது மாதிரி - வெளிப்படையாக கூறிய இளம் நடிகர்
தமிழில் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவருக்கு இருக்கும் ரசிகர் வட்டம் குறித்து நாங்கள் சொல்லிதெரிய வேண்டியதில்லை. தற்போது, வலிமை படத்தில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல திறமைகளை தனக்குள் கொண்டுள்ள இளம் நடிகர் ஹிப் பாப் ஆதி அஜித் குறித்து சுவாரயமான வேண்டுகோள் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் நடிப்பில் உருவாகியுள்ள நான் சிரித்தால் திரைப்படம் வரும் 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இது குறித்து பேசிய ஆதி, " ரஜினி சாரும், விஜய் சாரும் இந்த படத்தின் டீசரை பார்த்து பாராட்டினார்கள். அஜித் சார் மட்டும் இன்னும் பார்க்கவில்லை. அவரும் பார்த்து பாராட்டி விட்டார் என்றால் அது தான் எனக்கு கிடைத்த பெரிய அவார்ட் மாதிரி" என்று கூறியுள்ளார்.