"இது அட்லி காப்பி இல்ல, அட்ட காப்பி.." - இயக்குனரை அட்லியை கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே


இயக்குனர் ஷங்கரிடம் பயிற்சி பெற்றவர் அட்லி. அதற்கான சாயலை அவர் படத்தில் காட்சிக்கு காட்சி காணலாம். இவர் இயக்கிய ‘ராஜா ராணி’ அப்படியே மெளனராகத்தின் தழுவல் என பலர் விமர்சனம் எழுதினார்கள். 

அதனை அட்லி மறுக்கவோ வரவேற்கவோ இல்லை. ஒரே படத்தை தழுவினால் தானே பிரச்னை. இரண்டு படங்களை கலந்துவிட்டால்? பிரச்னை வராது இல்லையா? என்று அபூர்வ சகோதரர்கள், மூன்றுமுகம் என பல கலவைகள் கலந்து மெர்சலைத் தந்தார்.

இப்படி இவர் மீது காப்பி மேல் காப்பி புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இது குறித்து கேட்டால், ச.ரி.க.ம.ப.த.நி என்ற ஏழு ஸ்வரங்கள் என்று ஆரம்பித்து லாவகமாக முடித்து விடுகிறார்.

இந்நிலையில், நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய மனைவியுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை, பார்த்த ரசிகர்கள் இந்த செல்ஃபி கூட ரோஹித் ஷர்மாவிடம் இருந்து காப்பி அடித்தது தான். இது அட்லி காப்பி இல்ல, அட்ட காப்பி என்று கலாய்த்து வருகிறார்கள்.


Blogger இயக்குவது.