வெளியானது "திரௌபதி" படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி - ரசிகர்கள் கொண்டாட்டம்..!
தமிழ் திரையுலகில் கூட்டுத் தயாரிப்பு (Crowd Funding) முறையில் முதல் திரைப்படமாக உருவாகி வருவது திரெளபதி என்ற திரைப்படம். இத்திரைப்படத்தினை பழைய வண்ணாரப்பேட்டை படத்தினை இயக்கிய மோகன் ஜி இயக்கியுள்ளார்.
சமூக
வலைதளங்கள் மூலம் செய்த விளம்பரத்தின் வாயிலாக இந்த திரைப்படத்திற்கு
பலரும் தயாரிப்பாளர்கள் ஆகியுள்ளார்கள்.இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் அஜீத்தின் மைத்துனரும், ஷாலினியின்
சகோதரருமான ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார்.
இவர் ஏற்கனவே பெண் சிங்கம் போன்ற
பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக டூலெட்
படத்தில் நடித்த சுசீலா நடித்துள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளராக பழைய
வண்ணாரப்பேட்டை படத்திற்கு இசையமைத்த ஜூபின் மீண்டும் இயக்குனர் மோகன்
கூட்டணியில் இணைந்துள்ளார்.
மேலும் முக்கிய கதாபாத்திரங்களாக நடிகர் கருணாஸ், ஜீவா ரவி, நீண்ட
இடைவெளிக்கு பிறகு இயக்குனர் மறுமலர்ச்சி பாரதி இந்த படத்தில்
நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் பங்கு
பெற்று நடித்துள்ளார்கள்.ரசிகர்கள் மத்தியில் பெரும்எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 28-ம் தேதி திரைக்கு வருகின்றது.
தமிழ் சினிமாவின் முதல் #CrowdFunding திரைப்படம் #திரெளபதி #Draupathi.. #பிப்ரவரி #28 முதல் திரெளபதியின் மிரட்டல் ஆரம்பம் உலகெங்கும்.. @Gmfilmcorporat1 pic.twitter.com/ZEWOStFVWK— Mohan G 🔥😎 (@mohandreamer) February 18, 2020