சீனர்களுக்கு வழுக்கை வராமல் இருக்க காரணம் அவர்கள் சாப்பிடும் இந்த காய்தான் என்பது உங்களுக்கு தெரியுமா..?


உலகம் முழுவதும் அதிகளவு மக்களால் உண்ணப்படும் காய்கறிகள் ஒன்று முட்டைக்கோஸ் ஆகும். அதேசமயம் பல வழிகளில் சமைக்கக்கூடிய காய்கறியும் இதுதான். ஒவ்வொரு நாட்டிலும் முட்டைக்கோஸை வெவ்வேறு விதங்களில் சமைக்கிறார்கள். குளிர்ந்த காலநிலையில் இதனை பயிர்விப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று, ஆனால் திறமையான விவசாயிகள் கடினமாக உழைத்து ஆண்டு முழுவதும் முட்டைக்கோஸ் கிடைக்கும்படி செய்கின்றனர்.

முட்டைகோஸில் பல வகைகள் உள்ளது, ஆனால் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களில் எந்த வேறுபாடும் இல்லை. சொல்லப்போனால் தற்சமயம் பூமியில் இருக்கும் மிக பழமையான காய்கறி என்றால் அது முட்டைகோஸ்தான். பல்லாயிரம் ஆண்டுகளாக முட்டைக்கோஸ் மனிதர்களால் உண்ணப்படுவதற்கு காரணம் அதன் தனித்துவமான சுவை மட்டுமல்ல அதில் இருக்கும் வேறு சில விஷயங்களும்தான். இந்த பதிவில் முட்டைகோஸ் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

 

பழங்கால காய்கறி


முன்னரே கூறியது போல இப்போது பூமியில் பயிரிடப்படும் காய்கறிகளில் மிகவும் பழமையான காய் என்றால் அது முட்டைக்கோஸ்தான. கிடைத்திருக்கும் பதிவுகளின் படி முட்டைகோஸ் கிட்டதட்ட 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மக்களால் பயிரிடப்பட்டு வருகிறது. இது சீனாவின் ஷென்சி மாகாணத்தில்தான் முதன் முதலில் பயிரிடப்பட்டது.

 

வழுக்கைக்கான மருந்து (Hair-fall Medicines)



பண்டைய சீனாவில் மக்களை இதனை அதிகம் சாப்பிட்டதற்கான காரணம் அவர்கள் இதனை வழுக்கையை போக்கும் அற்புத மருந்தாக நினைத்ததுதான். இது தற்போது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் இப்போதும் சீன மக்களிடையே இந்த நம்பிக்கை உள்ளது. சீனர்களின் கூந்தல் ஆரோக்கியத்திற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். முட்டைக்கோஸில் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

 

அதிகளவு வைட்டமின் சி


முட்டைக்கோசில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது, இது உங்கள் உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது. மேலும் சரும ஆரோக்கியம், கீல்வாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. வைட்டமின் சி அதிகம் வேண்டுமெனில் சிவப்பு வண்ண முட்டைக்கோஸை சாப்பிடுங்கள். வழக்கமான பச்சை முட்டைகோஸில் இருக்கும் அளவை விட இதில் இரண்டு மடங்கு அதிகமுள்ளது.

 

சரும ஆரோக்கியம்


ஆரோக்கியமான முடி, சருமம் மற்றும் நகங்கள் போன்றவை இந்த இலைக்காய்கறிகள் மூலம் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள் ஆகும். முட்டைக்கோஸின் உயர் கந்தக உள்ளடக்கம் கெராடின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது, இதன் விளைவாக உங்கள் உடல் உள்ளேயும், வெளியேயும் நன்றாக இருக்கிறது.

 

புற்றுநோய்த் தடுப்பு


இன்று உலகளவில் அதிகளவு இருக்கும் ஆபத்தான நோய்களில் ஒன்று புற்றுநோய் ஆகும். ஆண்டுதோறும் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முட்டைகோஸை அடிக்கடி சாப்பிடுவது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்று அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடண்ட்கள் சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாக்கும். இது சரும புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்.

 

எடைக்குறைப்பு


ஒரு கப் முட்டைக்கோஸில் 33 கலோரிகள் உள்ளது, சமைத்த முட்டைக்கோஸை சாப்பிட நீங்கள் ஒருபோதும் பயப்பட வேண்டியதில்லை. மேலும் இதில் அதிகளவு நார்ச்சத்தும் குறைவான கொழுப்பும் உள்ளது. இது ஒரு ஆரோக்கியமான கலவை ஆகும். இது எடைக்குறைப்பிற்கு வழிவகுக்கும்.

 

தலைவலி


தினமும் பச்சை முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பது அல்லது சூடாக்கப்பட்ட முட்டைகோஸ் இலையை தலையின் மீது வைப்பது பயங்கரமான தலைவலியை குணப்படுத்தும். இது கேட்பதற்கு விசித்திரமானதாக இருக்கலாம். ஆனால் இது உலகளவில் நடைமுறையில் இருக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு வைத்தியமாகும்.

 

பண்டைய உணவு


சார்க்ராட் என்பது புளித்த முட்டைக்கோசிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவாகும். டச்சு நாட்டை சேர்ந்த மாலுமிகள் நீண்ட பயணத்தின் போது ஸ்கர்வி நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த உணவை அதிகம் சாப்பிட்டு வந்தனர்.

 

 உற்பத்தி


தற்சமயம் முட்டைக்கோஸ் உற்பத்தியில் உலகளவில் முதல் இடத்தில் இருப்பது சீனா ஆகும். எப்போதுமே சீனாதான் முட்டைக்கோஸ் உற்பத்தியில் முதலிடம் வகித்து வந்துள்ளது. முட்டைக்கோஸை அதிகளவு சாப்பிடும் நாடாக ரஷ்யா உள்ளது.
Blogger இயக்குவது.