விஜயுடன் நடித்தது போல அஜித்துடன் நடிப்பீர்களா..? - விஜய் சேதுபதியின் பளீச் பதில்..!


தமிழ் சினிமாவில் பத்தே ஆண்டுகளில் 50 படங்கள் கொடுத்த ஒரு ஹீரோ விஜய் சேதுபதி. பொதுவாக, ஹீரோக்கள் மார்க்கெட் இல்லை என்றான் தான் வில்லன் உள்ளிட்ட பிற வேடங்களில் நடிப்பார்கள். 

ஆனால், விஜய் சேதுபதி இதிலிருந்து மாறுபட்டு நிற்கிறார். ஹீரோ மார்க்கெட் ஸ்டெடியாக இருக்கும்போதே வில்லனாக நடித்து வருகிறார். ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்தார். 

இப்போது, நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஒரு சினிமா நிகழ்ச்சியில் பேசும்போது, ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கு கிடையாது. 

எனக்கு ஒரு கேரக்டர் பிடித்திருந்தால் மற்ற ஹீரோக்களுடனும் தொடர்ந்து நடிப்பேன். தற்போது விஜய்யுடன் நடித்து வரும் நீங்கள் அஜித்துடன் நடிப்பீர்களா..? என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, எனக்கு அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என கூறியுள்ளார். 

விரைவில் அஜித்தின் படங்களிலும் விஜய் சேதுபதியை வில்லனாக எதிர்பார்க்கலாம்போலஇருக்கே.
Powered by Blogger.