அஜித்தின் "வலிமை" குறித்து பரவிய தவறான தகவல் - உண்மை இது தான்..!


அஜித், ஹெச்.வினோத் கூட்டணியில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வரும் வலிமை ஷூட்டிங்கில் அஜித் சரியாக பங்கேற்பதில்லை என கடந்த சில நாட்களாக சில தகவல்கள் பரவி வந்தன. 

இது குறித்த தகவலை நம் தளத்தில் கூட வெளியிட்டிருந்தோம். ஆனால் அது உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது. அஜித் படத்தின் ஷூட்டிங்கில் மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்து வருகிறாராம். 

ஒரு ஸ்டண்ட் காட்சி எடுக்கும்போது அஜித்துக்கு அடிபட்ட நிலையில் இயக்குனர் வினோத் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு அஜித்தை ரெஸ்ட் எடுக்க சொல்லி கூறியுள்ளார்.

ஆனால், அஜித் அந்த வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடிக்கிறேன் என கூறி அன்று நள்ளிரவு வரை நடித்த்து கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி மற்றொரு நாள் ஒரு சண்டை காட்சியில் ரிஸ்க் அதிகம் இருக்கிறது என கூறி டூப் பயன்படுத்தலாம் என ஸ்டண்ட் மாஸ்டர் கூறியுள்ளார்.

ஆனால், அஜித் அதை ஏற்றுக்கொள்ளாமல். பராவயில்லை "நான் தான் சம்பளம் வாங்கினேன். நான் தான் நடிப்பேன்" என கூறி அந்த ரிஸ்கான காட்சியில் நடித்து கொடுத்துள்ளார். வலிமை படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அந்த தடையும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Blogger இயக்குவது.