"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..!
1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. பிறகு ஹைதராபாத், ராஜமுந்திரி சிறைச்சாலை, போபாலில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. கமல் ஹாசனின் காலில் சிறிய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது.
தற்போது கமல் குணமடைந்து சென்னை பூந்தமல்லியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் நேற்றைய படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் திடீரென சரிந்து விழுந்தது.
இதில் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா, படப்பிடிப்பு ஊழியர்கள் மது (29), சந்திரன் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்கள்.இந்த படத்தின் தயாரிப்பு உதவியாளர் மது பலியானதுதான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர், ரஜினியின் காலா, விஜய்யின் சர்கார், அஜித்தின் நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் தயாரிப்பு குழுவில் பணியாற்றியவர். படப்பிடிப்பு தளத்தில் ஓடி ஓடி வேலை செய்யக்கூடிய இவர் ரஜினியிடம் பாராட்டு பெற்றுள்ளார்.
மேலும், நடிகர் அஜித் இவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இவரின் இழப்பு கோலிவுட்டில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மது பலியானதை நம்பவே முடியவில்லை என்று படக்குழுவை சேர்ந்தவர்கள் கண்ணீர்விட்டு வருகிறார்கள். கிரேன் அறுந்து விழுந்ததை பார்த்த ஷங்கர் சார் தலையில் அடிச்சுகிட்டே அழுதபடி ஓடி வந்தார்.
இந்த சம்பவம் ஷூட்டிங் இல்லாத போது நடந்ததால் பலர் தப்பி விட்டனர். ஒருவேளை படப்பிடிப்பு நடக்கும் போது இந்த சம்வம் நடந்திருந்தால் நிலைமை மிகவும் மோசமாகியிருக்கும் என கூறுகிறார் விபத்தை நேரில் பார்த்த துணை நடிகை ஒருவர்.