வெயிட் பண்ணது - வீண் போகல - வந்தது D40 படத்தின் அப்டேட்..! - தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்.!


நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் "D40". நடிகர் தனுஷின் 40-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இதனை தொடர்ந்து, இன்று காலை முதலே தனுஷ் ரசிகர்கள் டிவிட்டாரில் ட்ரெண்ட் செட் செய்து உற்ச்சாகமாக காத்திருந்தனர். இந்நிலையில், ரசிகர்களின் காத்திருப்பை வீணடிக்காத வண்ணம் இந்த படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வரும் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தின் நடிகர் தனுஷின் கதாபாத்திரத்தின் பெயர் "சுருளி" என்பதாகும். அதனால், சுருளி என்பதே படத்தின் தலைப்பாக இருக்க கூடும் என்று கூறப்பட்டது. ஆனால், படக்குழு அதனை திட்டவட்டமாக மறுத்தது.


இந்நிலையில் படத்தின் தலைப்பு என்னவா இருக்கும் என யூகித்த ரசிகர்கள் ஆள் ஆளுக்கு ஒரு தலைப்பை பதிவிட்டு வருகிறார்கள்.

Blogger இயக்குவது.