"அண்ணாத்த" on டிஸ்கவரி - பியர் க்ரில்ஸ்-உடன் ரஜினி - நிகழ்ச்சி ஒளிபரப்பு எப்போது தெரியுமா..?


டிஸ்கவரி சேனலில் மிகவும் புகழ் பெற்ற ஒரு நிகழ்ச்சி என்றால் அது பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் "மேன் vs லைட்ட்" தான். இதில் ஒரு பகுதியாக பிரபலங்கள் கலந்து கொள்ளும் "இன் டு த வைல்ட் வித் பியர் கிரில்ஸ்" என்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். 

உலகப் பிரபலங்களுடன் காட்டிற்குள் பியர் பேட்டி எடுப்பததான் இந்நிகழ்ச்சியின் டிவி வடிவம். இந்தியாவில் இதற்கு முன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. 

அதற்குப் பிறகு ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியானதுமே பரபரப்பு ஆரம்பமானது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள பண்டிப்பூர் வனப் பிரதேசத்தில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள தேதியை அறிவித்துள்ளார்கள். 

மார்ச் மாதம் 23ம் தேதி ஒளிரப்பாக உள்ள இதன் முன்னோட்ட வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. டிஸ்கவரி சேனல் கூட தலைவா ஆன் டிஸ்கவரி என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரஜினிகாந்தை தலைவர் என குறிப்பிடுவது ஆச்சரியம்தான்.
Blogger இயக்குவது.